ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் படம் 'ஏகே61'. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிப்பதாக தகவல் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'தளபதி 66' படத்தில் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா?


இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு அப்டெட் கிடைத்துள்ளது. தீனா படத்தில் அஜித்துடன் நடித்த மகாநதி சங்கர் மீண்டும் 'ஏகே61' படத்தில் அவருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் முருகதாஸ் இயக்கிய 'தீனா' படத்தில் முதன்முறையாக அஜித்தை 'தல' என்று அழைத்தவர் மகாநதி சங்கர். அதற்கு பிறகுதான் தல என்ற பெயர் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.



இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மகாநதி சங்கள் அஜித்துடன் இணையவுள்ளார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் தொடர்பான சிறிய செய்தி வந்தாலும் அதை இணையத்தில் டிரெண்ட் செய்து கொண்டாடும் அஜித் ரசிகர்கள், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | யுவனுக்கு கார்த்தி கொடுத்த பரிசு - வைரலாகும் புகைப்படம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR