நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகை கஸ்தூரி சென்றுள்ளார். இவர் புதிய போட்டியாளராக இருக்கலாம் என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் மூன்றாம் சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது., இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.


100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களை கொண்டு துவங்கியது. இவர்களில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த வார தொடக்கத்தில் நடிகர் சரவணன் சில காரணங்களால் அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது 10 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.



இதனையடுத்து வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கும் நபர் இவர்களுடன் இணைந்து பயணிக்கலாம் என கூறப்பட்டது. வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில் இன்று இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது.


இதில் நடிகை கஸ்தூரி அவர்கள் பிக்பாஸ் வீட்டினுல் புதிய நபராக என்ட்ரி கொடுக்கின்றார். எனினும் இவர்தான் அடுத்த போட்டியாளர் என காட்சிப்படுத்தப் படவில்லை., எனினும் இவர் புதிய போட்டியாளராக இருக்கால்ம என வலைதளங்களில் செய்தி பரவி வருகின்றது.


முன்னதாக நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் ஆரம்ப நிலை போட்டியாளர்கள் பெயரில் கஸ்தூரி பெயரும் இருப்பதாக கிசுகிசுக்கப் பட்டது, ஆனால் இந்த தகவலினை கஸ்தூரி பகிரங்கமாக மறுத்தார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டினுள் கஸ்தூரி சென்றிருப்பது ரசிகர்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.