பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவின் மகளுக்கு லண்டனில் திருமணம்!
ராஜ்குமார் சேதுபதி-ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவுக்கும், அன்மோல் சர்மாவுக்கும் பிப்ரவரி 6-ம் தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகா சேதுபதி, ராஜேஷ் சர்மா மற்றும் சாதனாவின் மகன் அன்மோல் சர்மாவை பிப்ரவரி 6-ம் தேதி லண்டனில் திருமணம் செய்து கொள்கிறார். தற்போதைய கோவிட் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் விசா நடைமுறைக்கு உதவும் வகையிலும், இவர்களது திருமணம் லண்டனில் பதிவு செய்யப்பட உள்ளது. லண்டனில் (London) திருமண பதிவு நடைபெற்றாலும் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தென்னிந்திய முறைப்படி சென்னையில் பிரமாண்டமாக சினேகா- அன்மோல் திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ALSO READ | புதிய அவதாரத்தில் தோனி: 'அந்த பார்வையால்' திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்
இந்த திருமண விழாவில் அனைத்து நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் முறையான அழைப்பிதழ்கள் வழங்கப்படும் என்று மணமக்களின் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர். சினேகாவும் - அன்மோல் ஷர்மாவும் தங்கள் வாழ்க்கை பயணத்தை இணைந்து தொடங்கும் தருணத்தில் அனைவரின் ஆசீர்வாதங்களையும், பிரார்த்தனைகளையும் பெற விரும்புவதாக மணமக்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜ்குமார் சேதுபதி மற்றும் பிரபல நடிகை ஸ்ரீப்ரியா தம்பதியரின் மகள் சினேகா சேதுபதி லண்டனில் உள்ள வாரிக் கல்லூரியில் சட்டம் பயின்ற பின், லண்டனிலேயே தனது முதுகலை மற்றும் சட்டப் பயிற்சி படிப்பையும் படித்து முடித்துள்ளார். அதேபோல மணமகன் அன்மோல் ஷர்மாவும் இரட்டை MBA படித்துவிட்டு, லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்தில் பணிபுரிகிறார். மணமகனின் குடும்பம் கடந்த 25 ஆண்டுகளாக இங்கிலாந்தில் (England) தொழில் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1970-80களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஸ்ரீப்ரியா. 'முருகன் காட்டிய வழி' என்ற படத்தின் திரைத்துறைக்குள் நுழைந்தவர், கே.பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் தனது திறமையான நடிப்பின் மூலம் திரையுலகை திரும்பி பார்க்க செய்தார். தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை மட்டுமல்லாது ஒருசில படங்களுக்கு தயாரிப்பாளராகவும், ஒருசில படங்களுக்கு இயக்குனராகவும் இருந்துள்ளார். திரைப்படங்களுக்கு பின்னர் சின்னத்திரையில் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்தார். அதேபோல இவரது கணவர் ராஜ்குமார் சேதுபதி தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார், நடிப்பு மட்டுமல்லாது பல வெற்றிப்படங்களையும் தயாரித்தும் இருக்கிறார்.
ALSO READ | விரைவில் OTT-யில் வெளியாக உள்ள படங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR