பிரபல நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் 32 வயதில் மரணம்!
Poonam Pandey Died: பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இன்று காலை கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்துள்ளார். அவருக்கு வயது 32 மட்டுமே.
நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே இன்று காலை கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அவரது 32 வயதில் இறந்ததுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை ஒரு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பூனம் பாண்டேவின் மேலாளரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியான அறிக்கையில், "இன்று எங்களுக்கு ஒரு கடினமான நாள். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்பான பூனம் பாண்டேவை இழந்துவிட்டோம். இந்த துக்க செய்தியை உங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். பூனம் பாண்டே அனைவரையும் அன்புடன் நேசித்தார். இந்த சமயத்தில் எங்களின் தனியுரிமையை கோருகிறோம்" என்று பதிவிடப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க | 2024 தேர்தலில் விஜய்யின் கட்சி போட்டியிடவில்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
மாடலும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே, சமூக வலைத்தளங்களில் மற்றும் சினிமா துறையில் மிகவும் சர்ச்சைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவர். நடிகையின் மரண செய்தி திரையுலகில் மற்றும் அவரது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், ஒரு சிலர் இது அவரது விளம்பர ஸ்டண்டாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஏனெனில், பூனம் பாண்டே அவரது கிளாமரான போட்டோ ஷூட்களுக்கும், கருத்துக்களுக்கும் பெயர் பெற்றவர். இருப்பினும், பூனம் பாண்டேவின் இறப்பு செய்தி அவரது மேலாளரால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
யார் இந்த பூனம் பாண்டே?
நடிகை பூனம் பாண்டே பாலிவுட்டில் மிகவும் பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய மாடல் ஆவர். 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்ட பூனம் பாண்டே, அதில் இந்திய அணி இறுதிப் போட்டியில் வென்றால் முழு ஆடையையும் கழட்டி வீடியோ போடுவேன் என்று பேசி இருந்தார். இந்த செய்தி அந்த சமயத்தில் தீயாய் பரவியது. இதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் பூனம் பாண்டே. இது தான் அவர் சர்ச்சையில் சிக்கிய முதல் சம்பவம். அதன் பிறகு மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து பல முறை சர்ச்சையில் சிக்கி உள்ளார். பூனம் பாண்டே கடைசியாக கங்கனா ரனாவத்தின் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று இருந்தார்.
திருமணத்திலும் சர்ச்சை
சாம் பாம்பேயுடன் பூனம் பாண்டே திருமணம் செய்து கொண்டதும் சர்ச்சைக்குள்ளானது. இவரை திருமணம் செய்து கொண்ட பிறகு பூனம் பாண்டே தினசரி சர்ச்சைகளில் இருந்து வந்தார். இவர்களது திருமணம், அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும், இவர்கள் இருவரும் நீண்ட நீண்ட நாட்கள் ஒன்றாக வாழவில்லை. கடந்த 2020ம் ஆண்டு திருமணமான சில வாரங்களில் தன் மீது வன்முறையில் ஈடுபட்டதாக தனது கணவர் சாம் பாம்பே மீது குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க | சிங்கப்பூர் சலூன் vs ப்ளூ ஸ்டார்.. வசூல் வேட்டையில் யார் முன்னிலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ