சிங்கப்பூர் சலூன் vs ப்ளூ ஸ்டார்.. வசூல் வேட்டையில் யார் முன்னிலை

Blue Star Vs Singapore Saloon Box Office Collection: ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் மற்றும் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பதை இப்போது பயற்றபோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 2, 2024, 10:54 AM IST
  • இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
  • எந்தப் படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது?
  • வசூலில் முந்தியது எந்தப் படம்?
சிங்கப்பூர் சலூன் vs ப்ளூ ஸ்டார்.. வசூல் வேட்டையில் யார் முன்னிலை title=

ப்ளூ ஸ்டார் Vs சிங்கப்பூர் சலூன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்: ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் மற்றும் அசோக் செல்வன் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி தற்போது வரை இந்த இரண்டு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்போம்.

ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்:
2011 ஆம் ஆண்டில் ரௌத்திரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் சிங்கப்பூர் சலூன். சிங்கப்பூர் சலூன் படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, கதாநாயகியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், லால், கிஷென் தாஸ், ஆன்னி ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் - மெர்வின் இசையமைத்திருந்தனர்.

மேலும் படிக்க | சேலையில் அல்லு அர்ஜுன்.. கசிந்தது புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்

அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார்:
அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் பிராதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 

சிங்கப்பூர் சலூன் vs ப்ளூ ஸ்டார்:
இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும் விமர்சன ரீதியாக ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தை சற்று முந்தியுள்ளது அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் திரைப்படம். இந்நிலையில் தற்போது வசூல் ரீதியாக எந்தப் படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள்.

வசூலில் முந்தியது எந்தப் படம்?
இந்நிலையில் தற்போது வசூல் நிலவரத்தைப் பற்றி பேசுகையில், ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் தீராப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் 8 கோடி ரூபாய் வரை வசூலித்தாக கூறப்படுகிறது, மறுபுறம் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரூ. 5 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டிற்கு வெளியிலும் தொடரும் சண்டை! விசித்ராவால் வந்த பிரச்சனை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News