விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று 'கனா காணும் காலங்கள்'.  இந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புலி என்கிற ராகவேந்திரா.  அதனைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, ஆஃபிஸ், பகல் நிலவு போன்ற பல தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.  தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் மாறன் என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினின் கல்லூரி நண்பராக நடித்து வருகிறார்.  இந்த தொடர் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்களின் மத்தியிலும் நன்கு புகழ்பெற்று இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | இந்த காரணங்களுக்காக தான் புஷ்பா, பேமிலி மேனில் நடித்தேன் - சமந்தா விளக்கம்!


தற்போது இந்த சீரியலில் நடித்துவரும் புலி சமூக வலைதளத்தில் பதிவிட்ட கிளிப் ஒன்று வைரலாகி வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில், ஹாஸ்பிடல் பெட்டில் படுத்துக்கொண்டவாறு கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டதோடு ஒரு கிளிப்பை பதிவிட்டு ஒரே ஒரு ஒருதலை காதல், மொத்த பாடியும் க்ளோஸ் என்பது போன்ற கேப்ஷனையும் சேர்த்து பதிவிட்டு இருந்தார்.  இதனையடுத்து ராகவேந்திரா காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றுவிட்டார் என்று பல செய்திகள் தீயாக பரவ தொடங்கிவிட்டது.


 



 



இவ்வாறு செய்திகள் ஊடகங்களில் பரவியதையடுத்து ராகவேந்திரா மற்றொரு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறுகையில் தான் விளையாட்டுக்காக தான் அந்த போஸ்டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கூறினார்.  மேலும் நான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகவில்லை, எனது வீட்டில் தான் இருந்தேன் அதை நன்றாக பார்த்தாலே தெரியும் அது ஹாஸ்பிடல் இல்லை என்பது.  அந்த வீடியோ போட்டதற்கு சாரி, நான் எதற்கு சாகனும், எனக்கு என் அப்பா அம்மாவை பாத்துக்கணும்.  யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ரன்வீர் சிங்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ