நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் பெரும் எதிர்பாப்புகளுடன் கடந்த 13-ம் தேதி வெளியானது. ஆனால், படத்திற்கு வந்த அதிகளவிலான எதிர்மறை விமர்சனங்களாலும்,  'பீஸ்ட்' திரையிடப்பட்ட ஸ்க்ரீன்களை 'கே.ஜி.எஃப் 2' ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளதாலும் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீஸ்ட் பட பணிகளின் போதே 'தளபதி-66' படம் குறித்த தகவல்கள் வெளியானது.  'தோழா', 'மகரிஷி' போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான் நடிகர் விஜயை வைத்து  'தளபதி-66' படத்தை இயக்குகிறார், இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.


இந்த படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. பூஜையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவர் விஜயுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த படம் குறித்து பேட்டியளித்துள்ள தயாரிப்பாளர் தில் ராஜூ, 'தளபதி-66' கதையை கேட்ட பிறகு விஜய், இதுபோன்ற ஒரு அற்புதமான கதையை நான் இந்த 20 வருடத்தில் ஒருமுறை கூட கேட்டதில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.  மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக கூறினார். தொடர்ந்து மாஸ் மற்றும் ஆக்‌ஷன் படங்களில் விஜய் நடித்து வந்த நிலையில் 'தளபதி-66' ஒரு பக்கா குடும்ப செண்டிமென்ட் படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு அண்ணன்கள் உள்ளனர் என்றும் கடைக்குட்டி தம்பியாக விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | தளபதி 66 படப்பிடிப்பிற்காக விஜய் எடுத்த முக்கிய முடிவு


இதனிடையே விஜய்க்கு அண்ணன் ரோலில் நடிக்க 1980களில் ஃபேமசான நடிகர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இரண்டு அண்ணன்களில் ஒருவராக 80-களில் ஸ்டார் நடிகராக வலம் வந்த மைக் மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



 மவுனராகம், மெல்லத்திறந்தது கதவு, பயணங்கள் முடிவதில்லை, விதி, நெஞ்சத்தை கிள்ளாதே என 80-களில் பிளாக் பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்தவர் மோகன். அவரது படங்களில் அதிகம்  மேடை பாடகராக தோன்றியதால் அவருடைய பெயர் பின்னாட்களில் மைக் மோகன் என மாறியது. 


பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த மோகன் தற்போது மீண்டும் நடிப்பில் பிஸியாகி ஹீரா எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளதன் மூலம் மோகனுக்கு கோலிவுட்டில் இது ஒரு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Actor Vijay: தளபதி 66-ல் இணைகிறீர்களா? பிரபுதேவா சொன்ன பதில் இதுதான்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR