சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், "கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல் இருக்கும் உங்கள் முகத்தை பார்க்கும்போது எனக்கு உற்சாகமாக உள்ளது. 


1976-ம் ஆண்டு மதுரைக்கு மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றேன். அப்போது அர்ச்சகர் என்ன நட்சத்திரம் என என்னிடம் கேட்டார். ஆனால் எனக்கோ நட்சத்திரம், கோத்திரம் தெரியாது. பின்னர் பெருமாள் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்தார்கள். அதன்பின் தெரிந்தது எனது நட்சத்திரம் கூட பெருமாள் நட்சத்திரம்தான். 


மதுரை என்றாலே வீரம்தான். மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ளீர்கள். உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால் ராகவேந்திரா திருமண மண்டபம் சைவம் என்பதால் வேறு ஒரு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன். 


சிறுவயதில் பெங்களூருவில் இருக்கும்போது ராஜ்குமாரின் பெரிய ரசிகன் நான். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் இரண்டுபேரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் அப்படி அவர். நானும் சென்று அவரை டச் பண்ணிருக்கேன். ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். பெற்றோர் மற்றும் பெரியவர்கள் காலில் மட்டும் விழுங்கள்.


இவ்வாறு பேசினார்.