வாரிசு இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால், அதற்குப் பிறகு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. வாரிசு படத்தில் நடித்திருந்த நடிகர்கள் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்ட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், அரங்கம் முழுவதும் ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்தது. விஜய் வரும்போதே அவருக்கு ஆரவார கோஷங்கள் அரங்கை அதிர வைத்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்பரித்த ரசிகர்கள் அவர் பேசுவதற்கு வரும்போது விண்ணை முட்டும் அளவுக்கு கோஷம் எழுப்பி வரவேற்றனர். விஜய்யும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அருமையாக பேசினார்.


ஆனால், இந்த சுவாரஸ்யங்களுக்கு கண் திருஷ்டி பட்டது போல, 'வாரிசு'படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதமடைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 


மேலும் படிக்க | ’சின்ன தம்பி படம் பார்க்க தோழியுடன் சென்றேன்’ வாரிசு விழாவில் ஓபனாக பேசிய விஜய்


சேதம் குறித்த கணக்கெடுப்புக்கு பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்க படும் என்று நேரு விளையாட்டு அரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


விஜய்யின் சுவாரஸ்ய பேச்சு


நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய், " நமது பயணம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் நாம் போகின்ற பாதை சரியா இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதேபோல், எனக்கு நிறைய அன்பு கொடுத்து இருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாம் முத்தம் கொடுக்க எனக்கு ஒரு ஸ்டைல் மாட்டியது. இனிமே இது தான். யோகி பாபு ஒரு காலத்தில் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் இருந்தார். இப்போது யோகி பாபுவை ஒரு படத்திலாவது நடிக்க வைக்க வேண்டும் என பலரும் ஆசைபடுகின்றனர். அந்த வளர்ச்சி சந்தோஷம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.  


எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் நடித்தது குறைவுதான். அவருடைய கனவு கொஞ்ச தூரத்தில் தான் உள்ளது. அன்பு தான் இந்த உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரே ஆயுதம். எதற்காகவும் அவற்றை விடக்கூடாது. அதில் ஒன்று உறவுகள், மற்றொன்று நம்மை விட்டு கொடுக்காத நண்பர்கள். இந்த இரண்டு உறவுகள் இருந்தாலும் போதும் என்று நடிகர் விஜய் தெரிவித்தார். 


நம்மை விடுக் கொடுக்காத நண்பர்களுக்காக பரிந்து பேசிய விஜயைப் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள், மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல், இருக்கைகளையும் சேதப்படுத்தியதால், விஜய் படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு சிக்கல் அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | Varisu Audio Launch : செருப்புகளை வீசி எறிந்த ரசிகர்கள்... போலீசாருடன் தள்ளுமுள்ளு - வீடியோ!


மனிதர்களை பிரிக்கும் மதம் வேண்டாம்


ரத்த தானம் செயலை நான் தொடங்க காரணம் ரத்தத்திற்கு மட்டும் தான் வேறுபாடு கிடையாது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி கிடையாது, மதம் கிடையாது. மனிதர்கள் தான் பிரித்து பார்த்து பழகி விட்டோம். ரத்தத்திற்கு அந்த பேதம் கிடையாது.


6000 பேருக்கு மேல் அந்த செயலியில் இணைந்து உள்ளனர். பலர் ரத்த தானம் செய்து உள்ளனர். இது எல்லாம் மன்ற நிர்வாகிகளுக்குதான் சேரும். பிடித்து இருந்தால் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள்" என்றும் விஜய் தெரிவித்திருந்தார். 


மேலும் படிக்க | என் நெஞ்சில் குடியிருக்கும்... கூலான குட்டி கதை... செல்பி வீடியோ - விஜய்யின் முழு பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ