Varisu Audio Launch : செருப்புகளை வீசி எறிந்த ரசிகர்கள்... போலீசாருடன் தள்ளுமுள்ளு - வீடியோ!

Varisu Audio Launch : வாரிசு பட இசை வெளியீட்டு விழா நடக்கும் அரங்குக்கு வெளியே  ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 24, 2022, 06:20 PM IST
  • வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.
  • ஏறத்தாழ 3 வருடங்கள் கழித்து ரசிகர்கள் மத்தியில் உரையாற்றி உள்ளார்
  • வாரிசு படத்தின் மொத்த பாடல்கள் குறித்த அறிவிப்பு வெளியானதாக தகவல்.
Varisu Audio Launch : செருப்புகளை வீசி எறிந்த ரசிகர்கள்... போலீசாருடன் தள்ளுமுள்ளு - வீடியோ! title=

பொங்கல் விருந்தாக அமையப்போகும் விஜய்யின் 'வாரிசு' படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  படத்தை திரையில் காண வேண்டும் என்கிற ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி சொல்லப்போகும் குட்டி ஸ்டோரியை கேக்கவே பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர். 

முன்னர் வெளியான பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா எதுவும் நடைபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.  ஏற்கனவே விஜய் சொன்ன ஒரு குட்டி ஸ்டோரிக்கு விஷுவல் எஃபெக்ட் கொடுத்து ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ ட்ரெண்டிங்கானது.

ஏற்கெனவே, ரசிகர்கள், பிரபலங்களால் அரங்கம் நிறைந்துவிட்ட நிலையில், தற்போது முக்கிய பிரபலங்கள் வந்துகொண்டிருக்கின்றனர். மேலும், இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழகம் எங்கும் இருந்து ரசிகர்கள் படையெடுத்து நேரு அரங்கில் குவிந்துள்ள நிலையில், பலரும் டிக்கெட் கிடைக்காமல் அரங்குக்கு வெளியேவும் கால் வலிக்க காத்திருக்கின்றனர்.  

மேலும் படிக்க | Varisu Audio Launch : தந்தைக்கு இடம் கொடுத்த 'வாரிசு'

மேலும், அரங்கிற்குள் நுழைய அனுமதி கிடைத்தவுடன் முறையான நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் ரசிகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். அரங்கின் கதவு திறந்தவுடன் முண்டியடித்துக்கொண்டு ரசிகர்கள் செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. 

சுமார் 40 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட நேரு உள்விளையாட்டு அரங்கில் நிரம்பி வழிந்துகொண்டிருக்கும் வேளையில், வெளியில் நின்று கொண்டிருந்த ரசிகர்களும் அரங்கிற்குள் நுழைய முயன்றனர். 

அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால், அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்கள் போலீசாரை கீழே, தள்ளி செருப்புகளை பறக்க விட்டு கேட்டுகளை எட்டி உதைத்து பேனர்களை கிழிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.  தள்ளு முள்ளு செருப்புகள் சிதறி கிடக்கும் காட்சிகளும் வெளியாகின. 

நிகழ்ச்சிக்கு அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்புவிடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 பகுதிகளிலும் வாரிசு படத்தை விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொங்கலுக்கு வெளிவர உள்ள துணிவு படத்தை தமிழ்நாடு முழுவது்ம ரெட் ஜெய்ண்ட் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | வாரிசு ஆடியோ லான்ச்! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News