பிப்ரவரி 2 போகன் ரிலீஸ்

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா, அக்ஷரா கவுடா வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் போகன். பிரபுதேவின் தயாரிப்பு நிறுவனமான தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார். மதன்கார்க்கி - தாமரை - ரோகேஷ் ஆகியோர் போகன் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளனர்.
இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்தநிலையில் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 2-ம் தேதி அன்று வெளிவர உள்ளது.