பிப்ரவரி 9 சி 3 ரீலீஸ்
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சி 3' படம் வெளியாவது மீண்டும் ஒருமுறை தள்ளிப் போய்விட்டது.
சூர்யா நடிப்பில் சிங்கம்-3 படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில் இந்த படம் தொடர்ந்து பலமுறை தள்ளிப்போகிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான தேதியை படக்குழு பலமுறை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக 3-வது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முன்னதாக இப்படம், குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என அறிவித்திருந்தது, பின்னர் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் எங்கு கூறப்பட்டது பட நிறுவனம்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக போராடி வந்தனர். போராட்டங்கள் முடிவுக்கு வந்தாலும் இயல்பு நிலை திரும்பாததால் படம் வெளியிடுவதை தள்ளி வைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது இப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது.