விஜயின் 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Beast First Look) விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய புதுமுக இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்குகிறார் . துப்பாக்கியுடன் விஜய் நிற்பது போல் இருந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் ட்டிரண்டு ஆனது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சன் பிக்சர்ஸ் (Sun Pictures) தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இப்படத்தில் விஜய்க்கு முதல் முதலாக கதாநாயகியாக நடிக்கிறார்.  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.  தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.  


 



இந்நிலையில் பீஸ்ட் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றாக இயக்குனர் செல்வராகவன் (Director Selvaraghavan) நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சாணிக்காகிதம் என்ற படத்தில் முதன்முதலாக நடிக்கப் போவதாக அறிவித்தார் செல்வராகவன். 


ALSO READ | #Thalapathy65: விஜய்யின் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, குதூகலத்தில் ரசிகர்கள்


இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் செல்வராகவன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


தனுஷை வைத்து அடுத்ததாக படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் செல்வராகவன்.  அந்த படத்திற்கு நானே வருவேன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.


ALSO READ | விரைவில் தளபதி விஜயுடன் நடிப்பேன் ராஷ்மிகா மந்தனா அப்டேட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR