#Thalapathy65: விஜய்யின் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, குதூகலத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் தளபதி, நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், பெயரும் வெளியாகிவிட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 21, 2021, 06:37 PM IST
  • விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
  • விஜய்யின் 65 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது.
  • ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானவுடன் ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளது.
#Thalapathy65: விஜய்யின் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, குதூகலத்தில் ரசிகர்கள் title=

Kollywood News: தமிழ் சினிமாவின் தளபதி, நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், பெயரும் வெளியாகிவிட்டது. நாளை விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில், இன்று வெளிவந்துள்ள #Thalapathy65 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 

விஜய்யின் (Actor Vijay) அடுத்த படம் பீஸ்ட் (Beast) என பெயரிடப்பட்டுள்ளது. அவரது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதிரடி ஆக்ஷன் படமாக விஜய்யின் இந்த படம் இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் வண்ணம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது. விஜய்யின் 65 ஆவது படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும் அவரது ரசிகர்களுக்கு திருப்தியையும் உற்சகத்தையும் அளித்துள்ளன என்பதை சமூக உடகங்களில் பொங்கி வழியும் கமெண்டுகள் மற்றும் லைக்குகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

ரசிகர்களின் அன்பிற்கு பாத்திரமான தளபதி விஜய்யின் 47 வது பிறந்த நாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அவரது பிறந்தநாளன்று அவரை வாழ்த்துவதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

ALSO READ: Jagame Thandhiram: ஜகமே தந்திரம் வெளியீடு; Twitter விமர்சனம் இதோ

இந்த படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். அதிரடி ஆக்ஷன் படமான இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். நண்பன் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படத்தின் ஒளிப்பதிவை கையாள்கிறார். 

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இப்படம் 2022 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. தமிழக ஊரடங்கு (Lockdown) முடிந்த பிறகு சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையில், தளபதி விஜய் அடுத்ததாக டோலிவுட் இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் இணையவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படவில்லை.

ALSO READ: Master Film Remake: இந்தியில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது இந்த சூப்பர் ஹீரோதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News