தென்னிந்திய சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழாவான தென்னிந்திய பிலிம் பேர் விழா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் சிறந்த திரைப்படமாக காக்கா முட்டை, மலையாளத்தில் சிறந்த திரைப்படமாக ''பதேமாரி'', கன்னடத்தில் சிறந்த திரைப்படமாக ''ரங்கிதாரங்கா'', தெலுங்கில் சிறந்த திரைப்படமாக  ''பாகுபலி'', மலையாளத்தில் ''என்னு நின்டே மொய்தீன்' என தேர்ந்தேடுக்கப்பட்டன.


 தமிழில் பெற்ற பிலிம் பேர் விருதுகள் விவரங்கள்:-


சிறந்த நடிகர் - விக்ரம் ( ஐ )


சிறந்த நடிகை - நயன்தாரா ( நானும் ரவுடிதான் )


சிறந்த அறிமுக நடிகர் - ஜிவி பிரகாஷ்


சிறந்த இயக்குனர் - எம். ராஜா  ( தனி ஒருவன் )


சிறந்த துணை நடிகர் - அரவிந்த் சாமி ( தனி ஒருவன் )


சிறந்த துணை நடிகை - ராதிகா சரத்குமார் ( தங்கமகன் )


சிறந்த இசை - ஏ.ஆர். ரகுமான்  (''ஐ'') 


சிறந்த பாடலாசிரியர் - மதன் கார்கி - ( பூக்களே சற்று )


சிறந்த பின்னணி பாடகர் - சித் ஸ்ரீராம் ( என்னோடு நீ இருந்தால் )


சிறந்த பின்னணி பாடகி - ஸ்வேதா மோகன்  ( என்ன சொல்ல )


சிறந்த ஜூரி விருது - ஜெயம் ரவி  ( தனி ஒருவன் )


சிறந்த ஜூரி விருது (பெண்) - ஜோதிகா ( 36 வயதினிலே )