பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த சினிமாவின் முன்னோடி ராமராவ் காலமானார்
T Rama Rao Passes Away: கிராஸ்ஓவர் சினிமாவின் முன்னோடி ராமராவ் காலமானார்
1980 காலக்கட்டங்களில் பிளாக்பஸ்டர் படங்களை அளித்த மூத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் டி. ராமாராவ் இன்று (புதன்கிழமை) அதிகாலை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
மறைந்த ராமராவ் அவர்கள், தமிழில் பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்ததோடு, தெலுங்கு மற்றும் இந்தியில் 70 படங்களை இயக்கியிருக்கிறார்.
சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த ராமராவ் நள்ளிரவு 12.30 மணியளவில் காலமானார். வயது மூப்புக் காரணமாக தொடர்ந்து மருத்துவ ஆலோசனையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறும். அவருக்கு தாதினேனி ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சாமுண்டீஸ்வரி, நாக சுசீலா மற்றும் அஜய் என மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
1969 இல் 'நவராத்திரி' படத்தின் மூலம் இயக்குனராகத் தொடங்கிய ராமராவ், என்டிஆர், ஏஎன்ஆர், ஷோபன் பாபு, கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா மற்றும் ஜெயசுதா உள்ளிட்ட பல முன்னணி தெலுங்கு நட்சத்திரங்களுடன் பணியாற்றினார்.
மேலும் படிக்க: கதறி கதறி அழுத சஞ்சய் தத் - எதற்கு தெரியுமா?
ராமராவ் தெலுங்கில் 'நவராத்திரி', 'ஜீவன தரங்களு', 'பிரம்மச்சாரி', 'ஆலுமகளு', 'யமகோலா', 'ஜனாதிபதி கேரி அப்பாயி', 'இல்லாலு', 'பாண்டனி வாழ்க்கை' மற்றும்' பச்சானி காபுரம் போன்ற தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார்.
பாலிவுட்டிலும் பணிபுரிந்த தென் இந்திய இயக்குனர்களில் ஒருவரான ராமராவ் 1979 இல் ஹிந்தித் திரையுலகில் நுழைந்தார் மற்றும் அமிதாப் பச்சன், ஜீதேந்திரா, தர்மேந்திரா, சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா மற்றும் மிதுன் சக்ரவர்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார்.
'அந்தா கானூன்' படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஹிந்தி சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. ஹிந்தியில் 'ஜுதாய்', 'ஜீவன் தாரா', 'ஏக் ஹி பூல்', 'அந்தா கானூன்', 'இன்குலாப்', 'இன்சாஃப் கி புகார்', 'வதன் கே ரக்வாலே', 'தோஸ்தி துஷ்மானி' போன்ற பல சூப்பர்ஹிட் திரைப்படங்களையும் தயாரித்தார்.
மேலும் படிக்க: காருக்குள் அத்துமீறி ஏறிய இளைஞர்... கூச்சலிட்ட ஷில்பா ஷெட்டி
அவர் ஸ்ரீ லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார். விக்ரம், விஜய், ஜெயம் ரவி மற்றும் விஷால் போன்ற முன்னணி தமிழ் நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்தார். தமிழில் ‘தில்’, ‘யூத்’, ‘அருள்’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’, ‘மலைக்கோட்டை’ போன்ற சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்தார்.
திரைப்படங்கள் தவிர, ராமராவ் மெட்ராஸ் ஹைட்ராலிக் ஹோஸின் தலைவராக இருந்தார், இது உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிற்கும் துருப்பிடிக்காத எஃகு நெகிழ்வான நெளி குழாய்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
பிரபல இயக்குனரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
மேலும் படிக்க: பீஸ்ட் படத்தை பார்த்து கழுவி ஊற்றிய விஜய்யின் தந்தை!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR