இன்று ’சக்க போடு போடு ராஜா’-வின் முதல் சிங்கள்!
சந்தானம் நடிப்பில் வெளிவரும் ’சக்க போடு போடு ராஜா’-வின் முதல் சிங்கள் ட்ராக் இன்று வெளியாகிறது!
அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ’சக்க போடு போடு ராஜா’. விடிவி கணேஷ் இப்படத்தின் தயாரிக்கின்றார். ‘சர்வர் சுந்தரம்’ நாயகி வைபவி ஷாந்தாலியா சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கின்றார். காமெடி நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
முன்னணி நடிகர்களின் படங்களில் இதுவரை காமெடி செய்துவந்த விவேக், இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடி நடிகராக ஒப்பந்தம் ஆகியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் முதல் சிங்கள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.