அடுத்தடுத்து வெளியாகும் ஐந்து படங்கள்! ரசிகர்களுக்கு ஜாக்பாட்!
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் 5 படங்கள் வெளியாக உள்ளது.
கொரோனா முதல் அலை முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் வெளியாகின. திரையரங்கு திறக்கப் பட்டாலும் சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள், தற்போது 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினமான அன்று, திரையரங்கு ஓடிடிட்டு என மொத்தமாக 5 படங்கள் வெளியாக உள்ளன. இதில் தமிழில் மட்டும் மூன்று படங்கள் வெளியாகிறது.
மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்த லாபம் திரைப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தலைவி படம் பான் இந்தியா படமாக செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. சந்தானம் நடிப்பில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த டிக்கிலோனா திரைப்படம் ஜீ 5 ஆப்பில் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது. அதனை தொடர்ந்து நானி நடிப்பில் உருவாகியிருக்கும் டக் ஜெகதீஷ் படம் அமேசன் பிரைமில் அதே தேதியில் வெளியாகிறது. நாகசைதன்யா நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் செப்.10 ல் திரையரங்கில் வெளியாகிறது. கொரோனா காலகட்டத்தில் திரைப்படங்கள் பார்க்க முடியாமல் தவித்த ரசிகர்களுக்கு ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் வெளியாவதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ALSO READ விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த நான்கு படங்களின் அப்டேட்கள்!
மேலும் செப்டம்பர் 17ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்த அனபெல்லா சேதுபதி படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவான கடைசி விவசாயி படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYe