விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த நான்கு படங்களின் அப்டேட்கள்!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள அனபெல்லா சேதுபதி, துக்ளக் தர்பார், லாபம், மைக்கேல் என நான்கு படங்களின் அப்டேட்கள் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2021, 01:16 PM IST
விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த நான்கு படங்களின் அப்டேட்கள்!  title=

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், சப்போர்ட்டிங் கேரக்டர் என எந்த கதாபாத்திரங்கள் ஆனாலும் ஏற்று நடிக்க கூடியவராக இருந்து வருகிறார்.  சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.  கடந்த பொங்கல் தினத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மாஸ் காட்டினார். தன் கைவசம் இருபதிற்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார் விஜய் சேதுபதி.  தற்போது விஜய் சேதுபதியின் அடுத்த நான்கு படங்களின் அப்டேட்களும் ஒரே நேரத்தில் வந்துள்ளது.

ALSO READ சூர்யாவை தொடர்ந்து ஓடிடி ஹீரோவாகும் விஜய் சேதுபதி!

விஜய்சேதுபதி,டாப்சி,ராதிகா,ஜெகபதி என முன்னணி நடிகர்கள் நடிக்கும் அனபெல்லா சேதுபதி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.  ஹாரர் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி,டாப்ஸி இருவருக்குமே இரட்டை வேடங்கள் என்று கூறப்படுகிறது.  இப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.  நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, பார்த்திபன் இணைந்து நடித்த அரசியல் கதையை மையமாக கொண்ட துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் வரும் 31ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அதன்பின் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

 

சமீபத்தில் மறைந்த இயக்குனர் எஸ்பி ஜெகநாதனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த லாபம் திரைப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிப்பு வந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் மைக்கேல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.  மேலும் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYe

Trending News