இந்தியாவில் பிரபலமான ஹாலிவுட் தொடர்களுள் ஒன்று, ‘Friends’. ஆறு நண்பர்களையும் அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக கொண்டு இந்த தொடரின் எடுக்கப்பட்டிருந்தது. இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தவர், மேத்யூ பெர்ரி (Matthew Perry). 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டில் இறந்து கிடந்தார்! 


அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடிகர் மேத்யூ பெர்ரி வசித்து வந்தார். இவர், இன்று (அமெரிக்காவில் இன்று சனிக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் தன் வீட்டில் உள்ள ஜக்குஸி எனும் மினி நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து விசாரித்ததில், மேத்யூ, அதிகாலையில் வீட்டிற்கு வந்ததாகவும் தனது உதவியாளரை ஒரு முக்கிய வேலை காரணமாக வெளியில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்த பணியாளர் 2 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்து திரும்பி பார்க்கையில் மேத்யூ நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து 911 உதவி எண்ணிற்கு மேத்யூ வீட்டிற்கு அருகில் இருப்பவர்களும் அவரது உதவியாளரும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மேத்யூவின் உடலை மீட்டுள்ளனர். 


இறப்பிற்கான காரணம் என்ன? 


மேத்யூ, தனது நீச்சல் குளத்தில்தான் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இவருக்கு 54 வயதாகிறது. மேத்யூ, தண்ணீரில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் இதன் காரணமாக அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்புவதற்கு முன்னர், நடிகர் மேத்யூ உடலுக்கு அதீத பயிற்சி கொடுக்கும் வகையில் ஏதாவது ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அதன் மூலமாக கூட மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் போலீஸார் அந்நாட்டு ஊடகத்தினரிடம் கூறியுள்ளனர். 


மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க பிரியா ஆனந்த வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?



போதை பழக்கம்..பல அறுவை சிகிச்சைகள்..


மேத்யூ பெர்ரி, Friends தொடரில் நடித்து கொண்டிருந்த போதே அவருக்கு போதை பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவை இருந்தது. அந்த போதை பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு 19 முறை மறுவாழ்வு மையத்திற்கு சென்றுள்ளார். ஆனாலும் அவரால் அந்த பழக்கத்தில் இருந்த மீள முடியவில்லை. இந்த போதை பழக்கத்தினால் பல முறை இவருக்கு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Friends தொடரில் இவருடன் நடித்தவர்களிலேயே, இவர்தான் வயதில் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தியர்களுக்கு பிடித்த நடிகர்..! 


இந்தியாவில் பல ஆங்கில தாெடர்கள் பிரபலமானதாக உள்ளன. அதில், மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட தொடர், ‘Friends’. 3 பெண்கள்-3 ஆண்கள் என பேச்சுலர்ஸ் ஆக நியூ யார்க்கில் இருக்கும் ஆறு நண்பர்களையும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களையும் வைத்து இது காமெடி தொடராக உருவாகியிருந்தது. இதில் Chandler Bing (சேண்ட்லர் பிங்) எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார், மேத்யூ. ஆறு பேர் இருந்தாலும் தனது ஸ்பெஷலான காமெடியாலும், உடல் மொழியாலும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தவர் இவர். Friends 1994 ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் வெற்றிகரமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸிலும் இத்தொடர் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தியர்கள் விரும்பி பார்க்கும் ‘டாப் 10’ காமெடி தொடர்களுள், Friends-ம் ஒன்று. 


மேலும் படிக்க | “கேமரா முன்னாடியே கசமுசா..” பிக்பாஸில் எல்லை மீறும் போட்டியாளர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ