“கேமரா முன்னாடியே கசமுசா..” பிக்பாஸில் எல்லை மீறும் போட்டியாளர்கள்!

Bigg Boss 7 Tamil: விறுவிறுப்பாக நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 7-ல், இரண்டு போட்டியாளர்கள் முத்தம் கொடுத்துக்கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Oct 29, 2023, 06:26 AM IST
  • பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
  • இதில், சிலர் காதல் பறவைகளாக வலம் வருகின்றனர்.
  • ஒரு ஜோடி கேமரா முன்பாகவே முத்தம் கொடுத்துக்கொண்டனார்.
“கேமரா முன்னாடியே கசமுசா..” பிக்பாஸில் எல்லை மீறும் போட்டியாளர்கள்! title=

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ‘ஹிட்’ அடித்த ஷோவாக வலம் வருகிறது, பிக்பாஸ். இதன் 7வது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில், நாளுக்கு நாள் ஏதேனும் ஒரு புதிய கண்டெண்டுகள் தவறாமல் இடம் பிடிக்கின்றன. 

பிக்பாஸ் சீசன் 7:

2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டு மக்களை கவர்ந்த நிகழ்ச்சி, பிக்பாஸ். ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஹிட் ஆன இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி தமிழிலும் அதே அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த போட்டியை முதல் சீசன் தொடங்கி இந்த சீசன் வரை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் போட்டியின் 7வது சீசன், சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் பல பலமான போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

ஓயாமல் அடிக்கும் காதல் அலை:

பிக்பாஸ் போட்டியின் அனைத்து சீசன்களிலும் ஏதாவது ஒரு காதல் கதை வளர்வது வழக்கம். ஆரவ்-ஓவியா, மகத்-யாஷிகா, லாஸ்லியா-கவின், அமிர்-பாவனி என பிக்பாஸ் காதல் ஜோடிகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இந்த நிலையில், தற்போது ஆரம்பிக்கப்பட்ட 7வது சீசனில் கூட, ஒன்றல்ல இரண்டல்ல…பல போட்டியாளர்கள் ஒன்றாக லவ் கெமிஸ்டிரியை வளர்த்து கொண்டு இருக்கின்றனர். அதில் சமீபத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்த ஜோடிகளாக இருப்பது, ஐஷூ-நிக்ஸன். 

மேலும் படிக்க | பிக்பாஸ் வாய்ஸிற்கு பின்னால் இருக்கும் மர்ம நபர் யார்? அட ‘இந்த’ நடிகரா அது..?

கேமரா முன்னாடியே முத்தம்..! 

பிக்பாஸ் இல்லத்தின் அனைத்து இடங்களிலும் கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் என்ன செய்கின்றனர், என்ன பேசுகின்றனர் என்பதை 27*7 கண்காணித்து கொண்டே இருப்பர். ஆனாலும் சில போட்டியாளர்கள் கேமரா முன்பு செய்யக்கூடாததை எல்லாம் சில சமயங்களில் செய்து வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் தற்போதும் நடந்துள்ளது. 

போட்டி விதிமுறைகளின் படி, இந்த வாரம் நிக்ஸன் ஸ்மால் பாஸ் இல்லத்திலும் ஐஷூ பிக்பாஸ் இல்லத்திலும் உள்ளனர். இவர்கள் தனித்தனி வீடுகளில் இருந்தாலும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து பேசிக்கொள்கின்றனர். சமீபத்தில் வெளியான எபிசோடில், நிக்ஸன் கண்ணாடி பொறுத்தப்பட்ட அறையில் அமர்ந்திருந்தார். வெளியில் ஐஷூ அமர்ந்திருந்தார். அப்போது கண்ணாடியில் முத்தம் கொடுத்த ஐஷூ, நிக்ஸனையும் முத்தம் கொடுக்குமாறு கூறினார். முதலில் வெட்கப்பட்ட நிக்ஸன் பின்னர் அவரும் ஐஷூ போலவே செய்தார். இதைப்பார்த்த பார்வையாளர்கள், “கேமரா முன்னாடியே கசமுசாவா..” என இது குறித்து வைரலாகும் வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

பிற காதல் ஜோடிகள்..

எப்போதுமே பிக்பாஸ் போட்டியில் பல வயதுடையவர்களைத்தான் போட்டியாளர்களாக இறக்குவர். ஆனால் இந்த சீசனில், விசித்ரா மற்றும் யுகேந்திரனை தவிர வயதானவர்கள் என பிக்பாஸ் இல்லத்தில் வேறு யாரும் இல்லை. 19 வயதில் ஆரம்பித்து 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள்தான் தற்போது அதிகமாக உள்ளனர். 

ஏற்கனவே வெளியில் நன்கு பழகியவர்களாக இருந்த ரவீணா மற்றும் மணிச்சந்திராவை இந்த போட்டியில் பங்கேற்பாளர்களாக களமிறக்கினர். இவர்கள் இருவரும் ஒன்றாகவே இருப்பதால், பலர் இவர்களை காதலர்கள் என்றே முடிவு செய்து விட்டனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகனான சரவண விக்ரமும் யூடியூப் பிரபலமான பூர்ணிமாவும் க்ரஷ் மோடில் சுற்றுவதாக கூறப்படுகிறது. அதே சரவண விக்ரம், வெளியில் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் பேசப்படுகிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News