“கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் வெளியாக உள்ள “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
"மாயவன்" படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமான தயாரிப்பாளர் சி.வி.குமார், தற்போது தனது இயக்கத்தில் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” என்ற இரண்டாது படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வட சென்னை பின்னணியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் டேனியல் பாலாஜி, கலையரசன் ஹரிகிருஷ்ணன், வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள் ஆகியோர் நடிக்கின்றனர்.
“அட்டக்கத்தி” படம் மூலம் பா.ரஞ்சித்தை இயக்குனராக அறிமுகப்படுத்தியர் தயாரிப்பாளர் சி.வி.குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் வெளியாக உள்ள “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. தற்போது படத்தின் மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.