காதல் படங்களை இயக்குவதில் கைதேர்ந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், முதன்முறையாக காமெடி படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் நடித்து வரும் வைகைப்புயல் வடிவேலுவை வைத்து அந்த படத்தை எடுக்க முடிவெடுத்துள்ள அவர், அதற்காக பக்கவான காமெடி ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறார்.  அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய கவுதம் வாசுதேவ் மேனன் இந்த தகவலை தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 9 வருடங்களுக்கு பிறகு அமீர் இயக்கும் புதிய படம்!


வடிவேலுவுக்கு ஏற்றமாதிரி முழுமையான காமெடி கதையம்சம் கொண்ட படத்துக்காக தனது குழுவுடன் இணைந்து, தரமான ஸ்கிரிப்டை உருவாக்கி வருவதாக கூறினார். ஆனால், இந்தப் படம் குறித்து வடிவேலுடன் நேரடியாக பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை எனவும் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார். 



தற்போது சிம்புவுன் இணைந்து ’வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வரும் அவர், அந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகளை மும்பையில் நடத்தி வருகிறார். இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்த வெந்து தணிந்தது காடு டீம், ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பீஸ்ட் படமும் அந்த நேரத்தில் ரிலீஸாவதால், அந்த படத்துக்கு போட்டியாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு படமும் ரிலீஸாக வாய்ப்புள்ளது.



இன்னொருபுறம் வடிவேலு ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாடல் ஒன்றையும் அவர் பாடியுள்ளார். அவரை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


மேலும் படிக்க | ரஜினி, விஜய், கமல் படங்களை தொடர்ந்து மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR