9 வருடங்களுக்கு பிறகு அமீர் இயக்கும் புதிய படம்!

இயக்குனர் அமீர் 9 வருடங்களுக்கு மீண்டும் "இறைவன் மிக பெரியவன்" என்கிற படத்தை இயக்க இருக்கிறார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 14, 2022, 11:01 AM IST
  • 2005-ல் ஜீவாவை வைத்து ராம் படத்தை இயக்கினார்.
  • இயக்குனராக திரையுலகில் நுழைந்த அமீர் பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
9 வருடங்களுக்கு பிறகு அமீர் இயக்கும் புதிய படம்!  title=

கடந்த 2002-ல் சூர்யா நடிப்பில் வெளியான 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர்.  அதனை தொடர்ந்து 2005-ல் ஜீவாவை வைத்து ராம் படத்தை இயக்கினார், 2007-ல் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கினார்.  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து 2013-ல் ஜெயம் ரவியை வைத்து ஆதிபகவன் படத்தை இயக்கினார்.

மேலும் படிக்க | ரஜினி, விஜய், கமல் படங்களை தொடர்ந்து மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி!

இயக்குனராக திரையுலகில் நுழைந்த அமீர் பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.  இவர் முதன்முதலில் 2009ல் வெளியான யோகி படத்தின் மூலம் தன் நடிப்பு பயணத்தை தொடங்கினார்.  அதனை தொடர்ந்து அச்சமில்லை அச்சமில்லை போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  

இதனை தொடர்ந்து அமீர் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.  அந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாகவும் தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் அமீர் இயக்கும் இந்த புதிய படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இருக்கிறது.  அமீர் இயக்கும் இந்த படத்திற்கு இறைவன் மிக பெரியவன் என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் நடிகர் சூரி மற்றும் நடிகர் சத்யா மூக்கையா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் இப்படத்திற்கு திரைக்கதையை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதியுள்ளனர்.  

 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் உருவாக இருக்கிறது.  9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமீர் இயக்கத்தில் உருவாகப்போகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.  இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த இன்னும் பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' என்கிற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க | கார்த்தியின் ’சர்தார்’ படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News