நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, இன்று மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியாக உள்ளது. விஜய்யின் ரசிகர்கள் பீஸ்ட் ட்ரைலரை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுவரை இயக்குனர் நெல்சன் மற்றும் பீஸ்ட் படக்குழுவினர் படம் பற்றி வாய் திறக்கவில்லை.  இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஜான் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் இதுதான்! வெளியான தகவல்


தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் டிரெய்லர் வெளியாவதற்கு முன் படத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளது.  நெல்சன் திலீப்குமாரின் சமீபத்திய நேர்காணலின் படி, விஜய் பீஸ்ட் படத்தில் வீர ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் முழுக்க அவர் RAW ஏஜெண்டாகக் காணப்படுவார்.  தனது முந்தைய படங்களான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போல் பீஸ்ட் இருக்காது என்று நெல்சன் கூறினார். படம் ஆக்‌ஷன் மற்றும் காமெடி கலந்ததாக இருக்கும் என்று உறுதியளித்தார்.



பீஸ்ட் படம் மூன்று பாடல்களைக் கொண்டிருக்கும். அரேபிக் குத்து மற்றும் ஜாலி ஓ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், மூன்றாவது பாடல் கதையின் ஒரு பகுதியாகும்.  நெல்சன் திலீப்குமார், தளபதி விஜய்யைத் தவிர வேறு எந்த நடிகருடனும் பீஸ்ட் செய்திருக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.  நெல்சன் வில்லனாக நடிக்க 'புதிய' முகத்தைத் தேடிக்கொண்டிருந்தார். அப்படித்தான் டைரக்டர் செல்வராகவனை இணைத்துக்கொண்டார். அவரது கதாபாத்திரம் குறித்த சிறு தகவல் கூட இதுவரை வெளியாகவில்லை. 



விஜய்யின் உயரத்துக்கு ஏற்ற ஹீரோயினை நெல்சன் தேடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், பூஜா நடித்த ஆலா வைகுண்டபுரம்லோ மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. பூஜா சரியாக இருப்பார் என்று எண்ணி இந்த படத்தில் கமிட் செய்துள்ளனர்.  நெல்சன் தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்டை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூறுவதில் விஜய் முக்கிய பங்கு வகித்தார். அடுத்த கட்டத்திற்கு வருவதற்கு விஜய் உந்துதலாக இருந்ததாக நெல்சன் கூறினார்.  


மேலும் படிக்க | ‘வலிமை’ வசூல் எவ்வளவு? - சீக்ரெட்டை உடைத்த போனிகபூர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR