ஆசிஷ் வித்யார்த்தி ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் 1995 ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார். இவர் 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் ஏழுமலை, பகவதி, பாபா, தமிழன், ஆறு, அழகிய தமிழ் மகன், குருவி, கில்லி, தில், தமிழன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘கால் சாந்தியா’ திரைப்படம் மூலம் திரைத்துறையில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அறிமுகமானார். அதன் பின் தெலுங்கு, கன்னடத்திலும் அவரது நடிப்பை பார்த்து வியந்து அவருக்கு அழைப்பு வர தென்னிந்தியா பக்கமும் ஆஷிஷ் வித்யார்த்தி நடிக்க தொடங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி வந்த ஆஷிஷ் வித்யார்த்தி தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமான நடிகராக மாறினார். தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ‘என் வழி தனி வழி’. இன்று வரை இந்தி, தெலுங்கும் கன்னடத்தில் பல படங்களில் நடித்தும் மற்றும் இணையத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அவ்வப்போது இவர் சுற்றுலாவின் போது எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாவது வழக்கம். 



முன்னதாக நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி முன்னாள் நடிகை சகுந்தலா பருவாவின் மகள் ரஜோஷி பருவாவை முதலாவதாக திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 23 வயதில் ஒரு ஆண் மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஹன்சிகா மோத்வானிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ