’மே 28-ல் 234 தொகுதிகளிலும் இதை செய்யுங்க’ ரசிகர்களுக்கு உத்தரவிட்ட விஜய் மக்கள் இயக்கம்

மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படும் நிலையில், அன்றைய நாளில் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவளிக்குமாறு ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 25, 2023, 09:44 PM IST
’மே 28-ல் 234 தொகுதிகளிலும் இதை செய்யுங்க’ ரசிகர்களுக்கு உத்தரவிட்ட விஜய் மக்கள் இயக்கம் title=

விஜய் அரசியல் மூவ்

தமிழ் திரையுலகின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், தன்னுடைய அரசியல் மூவ்களை மிகவும் கவனமாக மேற்கொண்டு வருகிறார். உடனடியாக அரசியல் கட்சி ஆரம்பிக்குமாறு அவருடைய தந்தை சந்திரசேகர் கடந்த தேர்தலின்போது வலியுறுத்தியபோதும் நிராகரித்த அவர், அதன்பிறகு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் நிற்க கிரீன் சிக்னல் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்போதே விஜய்யின் அரசியல் மூவ்கள் கவனிக்கப்பட்டுவிட்டது. ஒரு பெரிய திட்டத்தோடு மெதுவாக தன்னுடைய அரசியல் காய்களை அவர் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது என்பது அரசியல் களத்தில் யூகிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | அண்ணாமலை மீது கோவை பாஜக நிர்வாகி பரபரப்பு புகார்..!

ரசிகர்களுக்கு அடுத்த உத்தரவு

அதன் தொடர்ச்சியாக இப்போது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அடுத்த உத்தரவுக்கு இசைவு கொடுத்திருக்கிறார் விஜய். அதுஎன்னவென்றால், மே 28 ஆம் தேதி உலகளவில் கடைபிடிக்கப்படும் பட்னி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், அதாவது 234 தொகுதிகளிலும் என பிரத்யேகமாக குறிப்பிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்குமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பில், தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்" திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "பட்டினி தினத்தை" முன்னிட்டு ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" இந்த நலப்பணி செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று புஸ்ஸி ஆனந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மே 28 ஏன்?

மே 28 ஆம் தேதி சாவர்க்கர் பிறந்தநாள். அந்த நாளில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அதே நாளில் தன்னுடைய ரசிகர்களை ஏழை எளியவர்களுக்கு உணவளிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார் விஜய். இந்திய நாடாளுமன்றம் திறப்பு விழா நிகழ்வு என்பது மிகப்பெரிய நியூஸாக இருக்கும் நாளில் விஜய்யின் இந்த நகர்வும் கவனத்தை ஈர்க்கும் என்று அரசியல் களத்தில் பேச்சு எழுந்துள்ளது. அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளும் இனி விஜய் பக்கத்தில் இருந்து எதிர்பார்க்கலாம் என கிசுகிசுக்கிறார்கள் அவரது ரசிகர்களும்.

மேலும் படிக்க | விஷசாராய விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்..விசாரணையை துரிதப்படுத்தும் சிபிசிஐடி போலீஸார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News