#Thalapathy63 படத்திற்கு பின்னர் கால்பந்தாட்ட விளையாட்டிற்கு நல்ல வரைவேற்பு கிடைக்கும் என இப்படத்தில் நடித்த கு.ஞானசம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லியுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் #Thalapathy63. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் யோகி, பாபு, கதிர், விவேக், ஆனந்த் ராஜ், இன்னும் பலர் நடித்து வருகின்றனர்.


பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில்  விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வரும் வேளையில் சமீபத்தில் நடிகர் விஜய் மைதானத்தில் வீல் சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி விஜய்யின் கதாபாத்திரத்தை உறுதி செய்தது.
 
இந்நிலையில் படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் இத்திரைப்படம் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
 
சென்னை ஆர்.ஏ. புரத்தில் கால்பந்து கோடை கால பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய கு.ஞானசம்பந்தன், விஜய் தனது 63-வது படத்தில் கால்பந்து வீரராக நடித்துள்ளார். அந்த படம் வந்தபிறகு கால்பந்திற்கு ஏற்றம் வரும் என நம்புகிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.