ஆந்திராவை மிரட்டும் காட் ஃபாதர்... பொன்னியின் செல்வனால் பதுங்கல் - தமிழ்நாட்டில் எப்போது?
சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள `காட் ஃபாதர்` திரைப்படத்திற்கு தெலுங்கு, இந்தி மொழிகளில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இப்படம் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கி, மோகன்லால் நடித்த திரைப்படம் 'லூசிபர்'. 2019ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் கேரளா மட்டுமின்றி, தென்னிந்தியாவின் பல இடங்களிலும் ஹிட் அடித்தது. பிருத்வி ராஜ், டோவினோ தாமஸ், விவேக் ஓப்ராய், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்திருந்தனர்.
இதை தொடர்ந்து, இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீ-மேக்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான மோகன் ராஜா இயக்கினார். சிரஞ்சீவியின் 153ஆவது திரைப்படமான இதில்,முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | தாராள பிரபுவுக்கு திருமணமா...! கண்ணீர் வடிக்கும் சாக்லேட் பாய் நடிகரின் ரசிகைகள்
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே காட் ஃபாதர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். சிரஞ்சீவியின் முந்தைய திரைப்படமான 'ஆசார்யா' தோல்வியடைந்த நிலையிலும், இந்த படத்திற்கான ஓப்பனிங் சிறப்பாக அமைந்துள்ளது.
தெலுங்கிலும், இந்தியிலும் படம் வெளியாகியிருந்தாலும், தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி நடைபோட்டுவருவதால், காட் ஃபாதர் திரைப்படம் இங்கு வெளியாகவில்லை. சிரஞ்சீவிக்கு இங்கு சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் பெரிதாக மார்க்கெட் இல்லாததும் ஒரு காரணம். இருப்பினும், சென்னையில் கூட காட் ஃபாதர் திரைப்படம் வெளியாகவில்லை என்பது நினைவுக்கூரத்தக்கது.
எனவே, சமூக வலைதளங்களில் படம் கொண்டாடப்படுவதை அடுத்து, இங்கு படம் எப்போது வெளியாகும் என தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுவரை அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. ஆனால், நாகார்ஜூனா நடிப்பில் வெளிவந்திருக்கும்'கோஸ்ட்' (தெலுங்கு), மற்றொரு தெலுங்கு திரைப்படமான 'சுவாதி முத்தயம்' ஆகியவை சென்னையின் சில திரையரங்குகளில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆக்கிரமித்த பொன்னியின் செல்வன் - திணறும் தமிழ் படங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ