“குலேபகாவலி” திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து, இந்த படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்யாண் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் படம் “குலேபகாவலி”. இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரேவதி, ராம்தாஸ் ஆகியோர் முக்கிய நடித்துள்ளனர். குலேபகாவலி படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


விவேகா மற்றும் மெர்லின் இசையமைத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் ‘குலேபா ப்ரோமோ வீடியோ பாடல்’ ஜனவரி 2-ம் தேதி வெளியிடப்பட்டது.


அதை தொடர்ந்து தற்போது, இந்த படமானது பொங்களை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ம் தேதி வெளியீடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.