மீண்டும் இணையும் ஜீவி - கவுதம் மேனன் கூட்டணி!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளராக இருந்து வந்த ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார், இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ஓரளவு பொழுதுபோக்கான படமாக அமைகிறது. படங்களில் நடித்துக்கொண்டு இருந்தாலும், இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான செல்ஃபி படம் நல்ல வரவேற்பை பெற்றது, மதிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மேலும் படிக்க | என் பெயரில் மோசடி நடக்கிறது ஏமாறாதீர்கள் - குக் வித் கோமாளி புகழ்
அதனைத்தொடர்ந்து இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் புதுமுக இயக்குனரான கே.விவேக் இயக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகினார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புலனாய்வு திகில் த்ரில்லர் படத்திற்கு ' 13 ' என்று பெயரிடப்பட்டுள்ளது மற்றும் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு காரின் பின்புறக் கண்ணாடியில் ஜி.வி.பிரகாஷின் முகம் ஆவேசமாக இருப்பது போன்று காட்சியளிக்கிறது, அதில் பேய் மரம் போல ஒரு மரம் தெரிகிறது. மேலும் இந்த படத்தில் 'அன்வெஷிப்பின் கண்டேதும்', 'நிழல்' போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை ஆத்யா பிரசாத் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR