துணிவு அப்டேட்; பெரிய அளவுக்கெல்லாம் எதிர்பார்க்காதீங்க...ஹெச். வினோத் நச் பதில்
துணிவு படம் குறித்து பெரிய அளவுக்கெல்லாம் எதிர்பார்த்து வராதீர்கள் என ரசிகர்களுக்கு ஹெச்.வினோத் அட்வைஸ் செய்துள்ளார்.
பொங்கல் விருந்தாக நடிகர் அஜித் நடித்திருக்கும் ‘துணிவு’ திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. வாரிசுக்கு நேரடி போட்டியாக களமிறங்கும் இந்தப் படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராக உள்ளன. முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், ரூ.1000 கொடுத்து ரசிகர்கள் டிக்கெட் புக் செய்து வருகின்றனர். பலர் ஆர்வமாக படம் பார்க்க விரும்பினாலும் டிக்கெட் கிடைக்கவில்லை என ஏமாற்றத்தையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அத்தகைய தீவிர ரசிகர்களுக்கு ஹெச்.வினோத் லைப்டைம் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
துணிவு படம் எப்படி?
துணிவு படம் எப்படி இருக்கும் என ஹெச் வினோத் தெரிவித்துள்ளார். அதில், "முதல் பாதி ரசிகர்களுக்கானதாக இருக்கும். இரண்டாம் பாதி அனைத்து ரசிகர்களுக்குமானதாக இருக்கும். அதாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள், பெண்கள் வரை அனைவரும் படத்தை ரசிப்பார்கள். சுருக்கமாக சொன்னால், பக்கா பேம்லி எண்டர்டெயின்மென்டாக இருக்கும். துணிவு படம் ஏறத்தாழ ஏழே மாதத்தில் எடுக்கப்பட்ட படம். எங்களால் முடிந்தளவுக்கு சிறப்பாக கொண்டு வந்திருக்கிறோம்.
மேலும் படிக்க | விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் புதிய சிக்கல்!
ரசிகர்களுக்கு அட்வைஸ்
ரசிகர்களை நிச்சயம் திருப்திபடுத்தும் என நம்புகிறேன். அதேநேரத்தில் அஜித் சார் போன்ற பெரிய நடிகருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் என்பது மிகப்பெரியது. அவர்கள் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். படம் அறிவிப்பு முதல் இப்போது வரை தொடர்ச்சியாக படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டே இருப்பதுடன், பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரம் வரை அலசி ஆராய்கிறார்கள். அந்தளவுக்கு அவர்கள் இவ்வளவு மெனக்கெடலை போட வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
நேரத்தை பயன்படுத்துங்கள்
ஏனென்றால் ரசிகர்கள் இதற்காக செலவிடும் நேரம் என்பது விலைமதிப்பற்றது. ஆனால், அதற்கு பதிலாக தயாரிப்பு நிறுவனமும், நடிகர்களுக்கும் உங்களுக்கு ஏதும் கொடுக்கப்போவதில்லை. திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்ப்பது நல்லது. படம் ரிலீஸாகும் சில நாட்களுக்கு முன்பு படம் பார்க்க முன்பதிவு செய்யுங்கள். படம் பிடித்திருந்தால் பாராட்டிவிட்டு செல்லுங்கள். இல்லையென்றால் அடுத்த படத்தை பார்க்க செல்லுங்கள். இது போதும் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பயம் இல்லாமல் பால் அபிஷேகம்... துணிவு படத்தை துணிவுடன் கொண்டாடும் அஜித் ரசிகர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ