சிவகார்த்திகேயன், கும்பகோணம் அருகே திருவீழிமிழலை என்னும் சிற்றூரில் பிறந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகி இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற மாஸ் படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.


இப்படத்தைத் தொடர்ந்து மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ என்று தொடர்ந்து ஹிட் கொடுத்து அடுத்தடுத்து படிகளை தாண்டிக்கொண்டே சென்றார். இப்படி 10 படங்களை நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 11-வது படத்தில் இவர் நடிக்க உள்ளார். படத்தில் முன்னணி ஹீரோயின் நயன்தாராவுடன் இணைந்துள்ளார்.


சிவாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டி. ஒரு சாதாரண சராசரி இளைஞன் எப்படி பிரபலம் ஆனான் என்பதை இன்ச் பை இன்சாக சொல்கிறது சிவாவின் வளர்ச்சி. 


இந்நிலையில், நாயகன் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று சிவாவின் 11-வது தலைப்பை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.