வருத்தப்படாத வாலிப சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று, ஒரே வேளையில் வேலைக்காரனாகவும், சீம ராஜாவாகவும் தூள் கிளப்பி, அழகான கனா கண்டு, ஹீரோவாக பரிமளித்து, ரெமோவாகா ரணகளப்படுத்தி, நம்ம வீட்டு பிள்ளையாக அனைத்து ரசிகர்கள் உள்ளங்களிலும் இடம் பிடித்திருக்கும் நடிகர் சிவ கார்த்திகேயனின் பிறந்த நாள் இன்று. சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்களும் பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது 36 வது பிறந்தநாளை முன்னிட்டு, எஸ்.ஜே.சூர்யா, ஹன்சிகா மோத்வானி, இமான், சதீஷ், அதுல்யா ரவி உட்பட பல பிரபலங்கள் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.


#HappybirthdaySivakarthikeyan மற்றும் #Sivakarthikeyan ஆகிய ஹேஷ்டேக்குகள் காலை முதல் டிரெண்ட் ஆகி வருகின்றன.


டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) இணைந்து பணியாற்றத் தயாராக உள்ள நடிகர்-இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாதான் இந்த ஆண்டு சிவ கார்த்திகேயனை வாழ்த்திய முதல் பிரபலம். "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் நண்பரே, எங்கள் திரைப்படத் தொழில்துறையின் இளவரசர், உழைப்பால் உயர்ந்த சிவ கார்த்திகேயனுக்கு வரும் ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கட்டும்” என அவர் வாழ்த்தினார்.



சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகா மோத்வானி ட்விட்டரில் தனது பிறந்தநாளை வாழ்த்துக்களை தெரிவித்தார். இவர் சிவ கார்த்திகேயனுடன் 2014 இல் வெளியான மான் கராத்தே படத்தில் பணிபுரிந்தார்.



சிவகார்த்திகேயனின் நல்ல நண்பரான இசையமைப்பாளர் டி இமான், தனது வாழ்த்தில், “மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் @Siva_Kartikeyan! வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் அதிக படங்களில் நடிக்க வாழ்த்துக்கள்!” என்று எழுதினார்.



சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தனுஷின் (Dhanush) 3 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, ரஜினி முருகன் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களின் மூலம் நல்ல புகழைப் பெற்றார்.


மார்ச் 26 அன்று வெளிவரவுள்ளது சிவாவின் ‘டாக்டர்’


நெல்சன் திலிப்குமார் இயக்கிய டாக்டரின் வெளியீட்டிற்கு சிவகார்த்திகேயன் தயாராகி வருகிறார். இந்த படம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த உறுப்பு கொள்ளைக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டது. சிவ கார்த்திகேயன் அறிவியல் புனைகதைத் திரைப்படமான அயலான் படத்திலும் பணியாற்றி வருகிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இன்று, நேற்று நாளை புகழ் ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.


சிவகார்த்திகேயன் தற்போது கோயம்புத்தூரில் டான் என்ற மற்றொரு தமிழ் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தில் கல்லூரி மாணவர் வேடத்தில் அவர் நடிக்கிறார். பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் சமுத்திரக்கனி (Samuthirakani) ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.


ALSO READ: நடிகர் அஜித்தின் சங்கடமும் ரசிகர்களின் குமுறலும்… இதில் முதலமைச்சருக்கு என்ன சம்பந்தம்?


ALSO READ: 'ருத்ர தாண்டவம்' படத்தில் வில்லனாக நடிக்கும் Director கௌதம் மேனன்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR