மனதைக் கவரும் முதல் விமர்சனத்தை பெற்றது தனுஷின் 'கர்ணன்'

தனுஷின் கர்ணன் படத்தின் முதல் விமர்சனமாக கருதப்படும் டுவிட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : Jan 26, 2021, 04:10 PM IST
மனதைக் கவரும் முதல் விமர்சனத்தை பெற்றது தனுஷின் 'கர்ணன்'

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய படம் ‘கர்ணன்’. இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகையான ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, லால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதறக்கிடையில் தனுஷ் (Dhanush) இன் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. அந்தவகையில் விரைவில் ‘கர்ணன்’ (Karnan) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ | நடிகர் தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியானது கர்ணன் TitleLook!

இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) அவர்கள் படம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இருப்பதாகவும் ‘கர்ணன்’ படத்தின் குழுவினர் மிக பிரமாதமாக பணிபுரிந்து உள்ளாதாகவும் அந்த படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

 

 

தனுஷின் கர்ணன் படத்தின் முதல் விமர்சனமாக கருதப்படும் இந்த டுவிட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News