விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் 'வெள்ளி விழா நாயகன்' மோகன் நடிப்பில் கடந்த ஜூன் 7 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி அன்று உலகெங்கும் வெளியானது. தற்போது இந்த (ஹரா) திரைப்படம், திரையரங்குகளில் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா போல ரசிகர்கள் கூடி பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் கொடுத்துள்ள ரீ-என்ட்ரியை கொண்டாடி வருவதோடு, திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் அது கூறும் கருத்துக்காகவும் 'ஹரா' படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். 


'ஹரா' திரைப்படம் தமிழகமெங்கும் 152க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், மலேசியாவில் 330 திரையரங்குகளிலும், மற்றும் ஐரோப்பா, இலங்கை, லண்டன் உள்ளிட்ட இடங்களில் 220 திரையரங்குகளிலும் வெளியாகி நேர்மறை விமர்சனங்களையும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றுள்ளது. 


பெண்கள் விரும்பும் நாயகனாக இன்னமும் மோகன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் 'ஹரா' திரைப்படத்தை காண பெண்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வருகின்றனர். இன்றைய தலைமுறையை சேர்ந்த இளைஞர்களும் படத்தை வெகுவாக ரசிக்கின்றனர். 


மேலும் படிக்க | கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!


பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளன. முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக மோகன் முத்திரை பதித்துள்ளதால் இனி வரும் படங்களிலும் அவர் இதுபோன்ற பாத்திரங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 



'ஹரா' திரைப்படத்தில் மோகன் ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடித்துள்ளார். உலகெங்கும் உள்ள மக்கள் பார்க்க வேண்டிய யூனிவர்சல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள 'ஹரா' திரைப்படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம்' புகழ் கௌஷிக் மற்றும் 'பவுடர்' நாயகி அனித்ரா நாயர் மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.


பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் 'ஹரா' திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.


'ஹரா' திரைப்படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். வடத்திற்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார். மேலும் ஒளிப்பதிவு  வேலையை பிரகத் முனியசாமி, மனோ பிரபாகரன், மோகன் குமார், விஜய் ஶ்ரீ ஜி ஆகியோர் செய்துள்ளனர். படத்தொகுப்பு: குணா, மற்றும் சண்டை பயிற்சி விஜய் ஸ்ரீ ஜி செய்துள்ளார்.


மேலும் படிக்க | நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு ஜொலிக்கும் பிரியா அட்லி: போட்டோஸ் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ