நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்களைப் போலவே பின்னணி இசையும் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்துக்காக அமைக்கப்பட்ட பாடல்களைப்போலவே இப்படத்தில் பின்னணியில் ஒலிக்கும் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ எனும் பாடலும் தனிக் கவனத்தை ஈர்த்துள்ளது. அசுரன் எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஆதித்யன் இசையமைத்த இப்பாடல் விக்ரமில் இடம்பெற்ற பின்னர் தற்போது இணையத்தில் மீண்டும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.


லோகேஷ் கனகராஜைப் பொறுத்தவரை அவர் இயக்கிய கார்த்தியின் கைதியில் ‘மறுபடியும்’ படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘ஆசை அதிகம் வச்சு’ பாடல், பின்னணியில் ஒலிக்கும். நியூ ஜாக் ஸ்விங் ஸ்டைலில் உருவான அப்பாடல் கைதி படத்தில் சிறைச்சாலை சண்டைக் காட்சியின்போது வரும். கைதி படம் வெளிவந்தபோது இளையராஜாவின் ஒரிஜினல் பாடல் மீண்டும் வைரல் ஆனது.



அதேபோல அடுத்ததாக வந்த விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும் இளையராஜா இசையமைத்த ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் இடம்பெற்ற ‘கருத்த மச்சான்’ எனும் பாடல் இடம்பெற்றது. சலூன் கடையில் மாளவிகா மோகனன் பதுங்கியிருக்கும்போது அந்தப் பாடல் கடையில் உள்ள டிவியில் ஒலிக்கும்.


மேலும் படிக்க | அஜித் பட சாதனையை முறியடித்த லெஜெண்ட் சரவணன்!- ட்ரெண்டாகும் Ajith vs Legend!


இந்த நிலையில் அவர் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள விக்ரமில் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ இடம்பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் இப்பாடல் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘அசுரன்’ படத்தில் ஆதித்யன் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு ப்ரோக்ராமிங் செய்தது ஹாரிஸ் ஜெயராஜ்தானாம்.



இவ்விஷயத்தை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 1995ஆம் ஆண்டு VGP ஸ்டுடியோவில் ரெகார்டு செய்யப்பட்ட இப்பாடல் தற்போது வைரல் ஆகிவருவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | மதுரை ஆதீனத்தைக் கடுப்பேற்றிய நடிகர் விஜய்யின் படம் இதுவா?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR