நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் சர்ச்சையைச் சந்திப்பது வழக்கமான ஒன்று. விஜய் நடிப்பில் கடைசி 10 ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களில் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களுமே ஏதேனும் ஒரு வகையில் சர்ச்சையைச் சந்தித்துள்ளன.
இதனால் விஜய்யின் படங்கள் சர்ச்சையாகாமல் இருந்தால்தான் அது ஆச்சர்யம் எனும் நிலைமையே தற்போது இருந்து வருகிறது. அந்த வரிசையில் அவரது படம் ஒன்று தற்போது சர்ச்சையைச் சந்தித்துள்ளது. ஆனால் அது தற்போது வெளியான படம் அல்ல; பல ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான ஒரு படம்தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதற்குக் காரணம்- மதுரை ஆதீனம்.
மதுரையில், விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து மதுரை ஆதீனம் பேசினார். அப்போது திடீரென நடிகர் விஜய்யின் பக்கம் பேச்சைத் திருப்பிய அவர், துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி குறித்துப் பேசத் தொடங்கினார்.
மேலும் படிக்க | விக்ரம்: பாடல் வரிகள் திடீர் நீக்கம்- அரசியல் நெருக்கடி காரணமா?
அதில், பிள்ளையார் படத்துக்கு ரோஜாவைப் பறித்து வைத்தால் செடிகள் வாடுவதாகவும் அதுவே கதாநாயகிக்கு பறித்துவைத்தால் செடிகள் சிரிப்பதாகவும் விஜய் பேசுவதாக அமைந்துள்ள வசனத்தை சுட்டிக்காட்டினார். இது இந்துக் கடவுளை அவமதிக்கும் விதமாக உள்ளதாகக் கூறிய மதுரை ஆதீனம், இதுபோல வசனம் பேசிய விஜய்க்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் எனவும் கேள்வி எழுப்பினார்.
அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய்யின் படங்களை பார்க்கவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர் விஜய் பற்றி மதுரை ஆதினம் தெரிவித்துள்ள இக்கருத்து சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மேலும் படிக்க | விக்ரமில் மிரட்டிய Agent Tina: விஜய், அஜித்கூடவும் வொர்க் பண்ணிருக்காங்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR