சமூக விரோதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியீடு: தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவரான பிரஜின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சமூக விரோதி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தமிழகத்தின் தமிழ்த் தேசிய கருத்தியலை வலியுறுத்தும் அரசியல் ஆளுமைகள் இணைந்து வெளியிட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் சீயோன் ராஜா எழுதி இயக்கி இருக்கும் புதிய திரைப்படம் 'சமூக விரோதி'. இந்த திரைப்படத்தில் பிரஜின், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, வனிதா விஜயகுமார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


மேலும் படிக்க | விஜய்யின் 'லியோ' படத்தில் உருவாகி உள்ள புதிய சிக்கல்! குழப்பத்தில் திரையரங்குகள்!



ஜீஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மாலக்கி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஜியோனா ஃபிலிம் ஃபேக்டரி எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.




இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.


படத்தைப் பற்றி இயக்குநர் சியோன் ராஜா பேசும்போது, "இந்தச் சமூக விரோதி படம் உண்மையில்  சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை யார் உருவாக்குகிறார்கள்?  என்பதை மக்களிடம் அடையாளப்படுத்தி வெளிக்காட்டும் முயற்சியாக உருவாகியுள்ளது.இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் தேவை என்ற நோக்கில் இந்தப் படம் உருவாகி உள்ளது. இங்கே இத்தனை அரசியல் ஆளுமைகள் வந்துள்ளது அந்த நோக்கத்திற்கு ஆதரவு தருவதற்காகத்தான் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்திற்காகப் பலரையும் நாம் அணுகிக் கேட்டபோது அனைவரும் இந்தக் கதைக்காக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.


நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேட்டபோது முதலில் மறுத்தவர், பாத்திரத்தைக் கேட்டதும் அரை மனதாக ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்பில் கேமராவை ஆன் செய்ததும் ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார். அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தயாரிப்பாளர் ராஜன் அவர்களைக் கேட்டபோது ஒரு காட்சியில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்றார். மூன்று காட்சிகள் என்றேன். கதையைக் கேட்ட பிறகு நடித்துக் கொடுத்ததுடன் சம்பளமே வாங்கவில்லை. அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.


நாயகன் பிரஜின் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. கேரவான் இல்லாமல் படபிடிப்பு முடித்த நாயகன் அவர்தான்.அவர் மேலும் வளர்வார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் பேசப்படுவார். நான் பொழுதுபோக்குக்காகப படம் எடுப்பவன் அல்ல.கலையை அரசியல் படுத்த நினைக்கிறேன். அந்த வகையில் தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். மக்கள் ஆதரவு தர வேண்டும் "என்றார்.


மேலும் படிக்க | சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனையா? பெரிய கோடீஸ்வரர் தான் பா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ