சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 21 படத்தின் அப்டேட்: SK 21 என அழைக்கப்படும் இந்த படத்தின் டைட்டில் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இந்தக கட்டுரையில் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் சிவகார்த்திகேயன்:
நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan), ஒரு பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். தனது பேச்சால் மக்களை பயங்கரமாக கவர்ந்த அவர், அடுத்து தனுஷ் உடன் 3 படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு மெரினா படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், 10 ஆண்டுகளில் மளமளவென வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். 


மேலும் படிக்க | 'கல்கி 2898 AD' படத்தின் தீம் மியூசிக்கை இசை நிகழ்ச்சியில் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்! 


நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிராமத்து கதாநாயகன் கதாப்பாத்திரம் நன்றாக பொருந்தி போக, அதே போன்று பல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், எங்க வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனிடையே தற்போது கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 :
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார், மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அதேபோல் எஸ்கே 21 படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.


ராணுவ அதிகாரியாக நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கிறார். கடந்த 2022ஆம் ஆண்டு ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான வேலைகளும் நடந்து வருகிறது. முன்னதாக எஸ்கே 21 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப வேலைப்பாடுகள் காரணங்களுக்காக இந்த அப்டேட் தாமதமானது.


எஸ்கே 21 டைட்டில் அப்டேட் :
இந்நிலையில் எஸ்கே 21 என்று அழைக்கப்படும் இந்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைபடத்தில் இடம்பெற்று இருந்த போர் கண்ட சிங்கம்.. யார் கண்டு அஞ்சும்' என்கிற பாடல் வரிகள் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டைட்டிலாக வைக்க பரிசீலனை நடத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில், எஸ்கே 21 படத்தின் டைட்டில் போர் கண்ட சிங்கம் என இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு :
இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு SK21 படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது என்ற  அறிவிப்பை சிவகார்த்திகேயன் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர்.  



மேலும் படிக்க | ரசிகரின் போனை பிடுங்கி விசிறியடித்த பிரபல பாடகர்..வைரல் வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ