இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் டீசர் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘சூரரைப் போற்று’ படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவராசியமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு (Suriya) ஜோடியாக அபரணா பாலமுரளி மற்றும் இவர்களுடன் மோகன்பாபு, ஜாக்கி ஷெராப் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சூரரைப் போற்று படத்தை நடிகர் சூர்யாவின் நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.


இந்தநிலையில், இன்று ‘சூரரைப் போற்று’ படத்தின் டீசர் வெளியாகி, இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 


 



 


/p>


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.