ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது இந்த திரைப்படத்தினை தயாரித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், மகேஷ் பாபுவின் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி நடித்துள்ளார். மகேஷ் பாபு நேரடியாக நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான்.


கடந்த வாரம் பிரமாண்டமாக இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் தற்போது  படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.