‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி, தனது இயக்கத்தில் இரண்டாவது படமாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார். மேலும் மா.கா.பா. ஆனந்த், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு கவின் ராஜ் மற்றும் படத்தை பாலாஜி காபா தயாரித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது.
இந்நிலையில் வரும் 15ம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.