தெலுங்கில் ரீமேக்காகி வரும் ‘96’ திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படம் ‘96’ . பள்ளிப்பருவ காதல், நட்பை நினைவுப்படுத்தும் விதமாக உருவாகியிருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ராமசந்திரன்(ராம்), த்ரிஷா நடித்திருந்த ஜானகி தேவி(ஜானு) என்ற கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


இந்நிலையில், இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதில், கோல்டன் ஸ்டார் கணேஷ் மற்றும் பாவனா நடித்திருந்தார். அந்தவகையில் இப்படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. ஜானு கதாபாத்திரத்தில் சமந்தாவும், ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும் இணைந்து நடித்துள்ளனர். ‘ஜானு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தையும் தமிழில் இயக்கிய பிரேம் குமார் இயக்கியுள்ளார். 


இந்நிலையில் தற்போது ஜானு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.