முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கருணாகரன் - யோகிபாபு தற்போது இணைந்து பன்னிகுட்டியை மையமாக வைத்து நடிக்க உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பன்றியை வைத்து உருவாக இருக்கும் படம் `பன்னிகுட்டி'. யோகிபாபு, கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, `கலக்கப்போவது யாரு' ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.


`கிருமி' படத்தை இயக்கிய அனுசரண் முருகையா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிருஷ்ணகுமார் இசையமைக்க சதீஷ் முருகன் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் தற்போது ப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.