KGF Chapter 2 திரைப்படத்தில் கதாநாயகன் யஷ், தனது கதாபாத்திரத்திற்கான பெரும்பாலான வசனங்களை எழுதியதாக இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரமாண்டமாக நடைபெற்ற கேஜிஎப் 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது, ​​இயக்குனர் பிரசாந்த் நீல், இந்தத் தகவலைத் தெரிவித்தார். 


KGF அத்தியாயம் 2, 2022ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும்.  பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது, ​​படத்தில் தனது பெரும்பாலான வசனங்களை யாஷ் எழுதியதாக பிரசாந்த் தெரிவித்தார்.


மேலும் படிக்க | பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்


மார்ச் 27 அன்று, கேஜிஎஃப் 2 இன் டிரெய்லர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. "வன்முறை... வன்முறை... வன்முறை, எனக்குப் பிடிக்கவில்லை, தவிர்க்கிறேன்....ஆனால், வன்முறைக்கு என்னைப் பிடிக்கும்" என்ற யஷின் டயலாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் வெளியான இந்த டயலாக் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, மேலும் படம் திரையரங்குகளில் வெளியாவதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், அனந்த் நாக், அச்யுத் குமார், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  


KGF அத்தியாயம் 2 ஏப்ரல் 14ம் தேதியன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில், கதாநாயகன் ராக்கி மக்களின் மீட்பராக மாறுவதை மையமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பொள்ளாச்சி சம்பவம் தான் எதற்கும் துணிந்தவன் படமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR