This Week OTT Releases: Netflix, Prime Video, Disney+ Hotstar, JioCinema, Zee5 போன்ற ஓடிடி தளங்களில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.  ஹாய் நன்னா, தேஜாஸ் போன்ற படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது.  வரும் வாரத்தில் என்ன என்ன படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12th பெயில் (12th Fail)


12th Fail திரைப்படம் அனுராக் பதக்கின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் ஷர்மாவின் உண்மை கதையை இந்தப் படம் பேசுகிறது. இந்தியாவின் சிவில் சர்வீஸ் தேர்வுகளின் சவாலான கட்டமைப்பிற்குள் அவரது போராட்டங்கள், அசைக்க முடியாத முயற்சிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் மீது வெளிச்சம் போட்டு, அவரது அனுபவங்களை விவரிக்கிறது. இப்படம் டிசம்பர் 29, 2023 முதல் Disney+Hotstarல் வெளியாகி உள்ளது.


மேலும் படிக்க | புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் புது படங்கள்! எந்த சேனலில் எதை பார்ப்பது?


மேரி மை ஹஸ்பண்ட் (Marry My Husband)


மேரி மை ஹஸ்பண்ட் படம் பிரைம் வீடியோவில் ஜனவரி 1, 2024 அன்று வெளியாகி உள்ளது.  மேலும் ஒவ்வொரு திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளிலும் புதிய எபிசோடுகள் வெளியாகும்.  மேரி மை ஹஸ்பண்ட் படத்தில் பார்க் மின்-யங், நா இன்-வூ, லீ யி-கியுங் மற்றும் சாங் ஹா-யூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஹாய் நன்னா (Hi Nanna)


'ஹாய் நன்னா' படத்தில் நானி மற்றும் மிருணாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கியாரா கண்ணா, நாசர், ஜெயராம், பிரியதர்ஷி புலிகொண்டா, அங்கத் பேடி மற்றும் விராஜ் அஸ்வின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 4, 2024 அன்று Netflixல் வெளியாக உள்ளது.


தேஜஸ் (Tejas)


'தேஜாஸ்' தேசத்தை காக்கத் தீர்மானித்த IAF அதிகாரியின் கதையை பற்றி பேசுகிறது. இப்படத்தில் கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்க அன்ஷுல் சவுகான், வருண் மித்ரா, ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் விஷக் நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். 'தேஜாஸ்' ஜனவரி 5, 2024 அன்று Zee5ல் வெளியாக உள்ளது.


சோலோ லெவலிங் (Solo Leveling)


வேட்டையாடுபவர்கள் என்று அழைக்கப்படும் மனித போர் வீரர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட திறன்களைக் கொண்ட உலகில் கதை நகருகிறது. மனிதகுலத்தை சில அழிவிலிருந்து பாதுகாக்க அவர்கள் அரக்கர்களுக்கு எதிராக போராடுகின்றனர்.  சோலோ லெவலிங் படம் ஜனவரி 6, 2024 அன்று Crunchyrollல் வெளியாக உள்ளது.


பெர்லின் (Berlin)


பெர்லின் ஒரு ஸ்பானிய வெப் சீரிஸ் ஆகும்.  இது இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OTT வெளியீடுகளில் ஒன்றாகும். மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் நடித்த பெர்லின் என்ற கதாபாத்திரத்தை சுற்றி கதை சுழல்கிறது. பெட்ரோ அலோன்சோ, டிரிஸ்டன் உல்லோவா, மிச்செல் ஜென்னர், பெகோனா வர்காஸ், ஜோயல் சான்செஸ், யூரி டி. பிரவுன், மார்செல் கோன்சலஸ், மைக்கோ ஜாரி, ஜூலியோ பெனா, ஜூலியன் பாஸ்கல் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.  நெட்பிலிக்ஸில் தற்போது வெளியாகி உள்ளது.


மேலும் படிக்க | தெலுங்கிற்கு ஒரு பாகுபலி! தமிழுக்கு ஒரு அயலான் - தயாரிப்பாளர் ராஜேஷ் பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ