Captain Miller: தனுஷிற்கு அடுத்த தேசிய விருது உறுதியா...? கேப்டன் மில்லர் ட்விட்டர் விமர்சனம்!
Captain Miller Twitter Review: தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள `கேப்டன் மில்லர்` திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இதில் காணலாம்.
Captain Miller Twitter Review In Tamil: தமிழ் திரையுலகில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தனுஷ் - சிவகார்த்திகேயன் ஆகியோரின் திரைப்படங்கள் நேரடியாக போட்டியிடுகின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' திரைப்படமும், தனுஷ் நடிப்பில் 'கேப்டன் மில்லர்' திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இரண்டு திரைப்படங்களும் களம் காண்கின்றன. இந்த இரு திரைப்படங்கள் மட்டுமின்றி, தமிழில் அருண் விஜய் நடிப்பில் 'மிஷன் - சேப்டர் 1' மற்றும் தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு மற்றும் திரிவிக்ரம் ஆகியோரின் கூட்டணியில் உருவான 'குண்டூர் காரம்', விஜய் சேதுபதி - கேத்ரீனா ஃகைஃப் நடிப்பில் உருவான 'மெரி கிறிஸ்துமஸ்' உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களின் படங்களும் இன்று திரைக்காண்கின்றன.
அந்த வகையில், கேப்டன் மில்லர் திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் கேப்டன் மில்லரின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளில் இங்கு திரையிடப்படுவதற்கு முன்னரே காட்சிகள் போடப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களிலும் தமிழ்நாட்டில் திரையிடப்படுவதற்கு முன்னரே காட்சிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் X பக்கத்தில் பலரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் விமர்சனத்தை பதிவேற்றி வருகின்றனர், அவற்றை இதில் காணலாம்.
மேலும் படிக்க | பொங்கலன்று வெளியாகி ஹிட் அடித்த தமிழ் படங்கள்! இந்த ஆண்டு வெற்றி யாருக்கு?
அந்த வகையில் அமெரிக்காவில் வசிப்பவர் என சுயவிவரத்தில் குறிப்பிட்டுள்ள கார்த்திக் என்ற பயனர் (@meet_tk) கேப்டன் மில்லர் திரைப்படத்தை அமெரிக்காவில் தற்போது கண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டதாகவும், தனுஷின் நடிப்பு அபாரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனுஷ் போன்ற இயல்பான நடிகரை பெற்றதன் மூலம் கோலிவுட் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து பலரும் கேப்டன் மில்லர் படத்தின் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்த பின்னரும் அந்த பயனர் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,"எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், திரையரங்கில் டிக்கெட் பதிவு செய்துகொண்டு, ஒரு தேர்ச்சிப்பெற்ற நடிகர் நல்ல கதையை வைத்து என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் அனுபவியுங்கள். தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கே ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும்" என பதிவிட்டுள்ளார். மேலும், முடிந்தால் IMAX திரையில் பாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், சந்தீஷ் கிஷன், அதிதி பாலன், ஜான் கொக்கைன், நாசர், காளி வெங்கட் உள்ளிட்ட பெரும் நட்சத்திரம் பட்டாளமே கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
தனுஷின் துடிப்பான தோற்றம் மற்றும் மிடுக்கான வசனங்கள், ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள் என கேப்டன் மில்லர் திரைப்படத்தின் போஸ்டர் முதல் டிரைலர் வரை அனைவரையும் ஈர்த்தன எனலாம். எனவே, முதல் நாளான இன்றே தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்கு கிராக்கி நிலவுகிறது. இளைஞர்கள் பெரியளவில் இத்திரைப்படம் மீது எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.
குறிப்பாக, ராக்கி, சாணி காகிதம் என வித்தியாசமான திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தனுஷ் போன்ற பெரிய நட்சத்திரத்தை வைத்து, அசாத்திய முயற்சி மேற்கொண்டுள்ளார் என்றே கூறப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள், விமர்சனங்கள் சமூக வலைதளப்பக்கங்களின் பதிவுகளாகும். இந்த பதிவின் பயனர்கள் குறித்து Zee News உறுதிசெய்யவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ