தமிழ் திரையுலகில், அதிக விடுமுறைகளை குறிவைத்து படங்கள் வெளியாவது சகஜம். அந்த வகையில், வரும் பொங்கல் பண்டிகையை குறிவைத்து, இந்த ஆண்டு நான்கு தமிழ் படங்கள் வெளியாகின்றன. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் பொங்கலன்று வெளியான படங்களில் வெற்றி பெற்ற படங்கள் என்னென்ன தெரியுமா?
2014-வீரம்:
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் பண்டிகயையை முன்னிட்டு ஒரே நாளில் வீரம்-ஜில்லா உள்ளிட்ட படங்கள் வெளியாகின. விஜய் ஹீரோவாக நடித்திருந்த ஜில்லா படம், ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற, அதனுடன் போட்டியிட்ட அஜித்தின் வீரம் படம் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.
2015-ஐ:
விக்ரம் நடிப்பில் 2015ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம், ஐ. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடித்திருந்தார். இதனை, ஷங்கர் இயக்கியிருந்தார். படம், பிரம்மாண்டமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்திருந்தாலும் ரசிகர்களை இப்படம் கவர்ந்ததாால், இதற்கு பாக்ஸ் ஆபிஸில் வசூல் குவிந்தது.
2016-ரஜினி முருகன்:
சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நாயகனாக இருந்த ஆண்டு அது. கிராமத்து கதாப்பாத்திரங்கள் தனக்கு நன்றாக பொறுந்தி போனதை அடுத்து, அதே கிராமத்து செட்-அப் கொண்ட கதையை தேர்ந்தெடுத்து நடித்த படம்தான், ரஜினி முருகன். இப்படம், 2016ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடத்திருப்பார். சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இப்படத்தை இயக்கியிருந்தார்.
2019-விஸ்வாசம்:
நடிகர் அஜித்குமார் இரண்டாவது முறையாக கிராமத்து கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த படம், விஸ்வாசம். இந்த படத்தையும் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். பொங்கலை முன்னிட்டு வெளியான இந்த படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியனை பெற்றது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அவருக்கு மகளாக அனேகா நடித்திருந்தார்.
2020-பட்டாஸ்:
தனுஷ் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான படம், பட்டாஸ். இந்த படத்தை துரை செந்தில் குமார் இயக்கியிருந்தார். இதில் சினேகா, மகிரான் பிசாதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பெரிதாக பாசிடிவான விமர்சனம் வரவில்லை என்றாலும், படம் நல்ல வசூலை பெற்றது. இந்த படம், அந்த வருடத்தின் பொங்கல் வின்னராக கருதப்பட்டது.
2021-மாஸ்டர்:
2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி, விஜய்யின் மாஸ்டர் படம் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கைதி படத்தை இயக்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய இவர், இந்த படத்தில் ரசிகர்களை ஏமாற்றியதாக விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும், இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்தனர்.
2023 துணிவு:
கடந்த ஆண்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படம் ஒரே நாளில் வெளியானது. பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான இந்த இரண்டு படங்களில் இரண்டிற்குமே ஓரளவிற்கு சுமார் என்ற விமர்சனமே கிடைத்தது. இந்த நிலையில், வாரிசு படமே அதிக வசூல் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அதிகமான தியேட்டர்கள் ‘துணிவு’ படத்திற்கு ஒதுக்கப்பட்டதால், பொங்கலின் போது வெளியான படங்களில் இதுவே வெற்றி பெற்ற படமாக கருதப்படுகிறது.
2024 பொங்கலன்று வெளியாகும் படங்கள்..
இந்த ஆண்டு, 4 முக்கிய தமிழ் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றன. தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் மீதும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான்படத்தின் மீதும் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவற்றுடன் சேர்த்து, அருண் விஜய் நடித்துள்ள மிஷன் சேப்டர் 1 திரைப்படமும், விஜய் சேதுபதி நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் படமும் வெளியாகிறது. இப்படங்களில் எது வெற்றி பெறும் என்பது ரசிகர்கள் கைகளிலேயே உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ