ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


விஷாலின் ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. இதை தொடர்ந்ர்து அவர் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.


இவரது எழுத்து, இயக்கம், இசை, வசனம், நடிப்பு என அனைத்தும் படைப்பாக மீசைய முறுக்கு திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.


குஷ்புவின் அவ்னி மூவீஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் அடுத்த படம் ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டது. சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ மற்றும் 'மான் கராத்தே ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபன் தேசிங்கு என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக அனேகா என்ற நடிகை இந்த படத்தில் நடிக்கவுள்ளார். 


ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி இசையும் அமைக்கும் ஆதி இந்த படத்திற்காக எட்டு பாடல்களை கம்போஸ் செய்யவுள்ளார். இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த அரவிந்த் சிங் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.


இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதியின் இரண்டாவது படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற நவம்பர் 4-ம் தேதி மதியம் 12 மணிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.